Thursday, August 9, 2007

இன்னும் எழுதப்படாத என் கவிதை













பொய்யைக் கனவைக் கற்பனையைக்
கவிதையாய்க் கிறுக்கிடினும்
பிரமிப்புகள் நீங்கலாக
என்னவெல்லாமோ
எஞ்சியிருக்கின்றன இன்னும்
எழுதப்படாமலே இங்கு...!

வானவில்லின் வசீகரம்,
வண்ணத்துப்பூச்சி அழகு,
இதழ் விரிக்கும் பூக்களின் மென்மை,
காதலியின் பொய்க்கோபம்-எல்லாமே
எழுதப்பட்டிருப்பினும்...

எந்த மொழியில்,
எந்தச் சொற்களைக் கொண்டு,
எப்படி எழுதி முடிப்பேன்
என் தாயின் புன்னகையை
ஒரு சில வரிகளில்.....?

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

13 comments:

Anonymous said...

அது தான் அன்னையின் சிறப்பு. தன்னால் நிரப்பவியலாத விசயங்களை நிறைவேற்ற கடவுள் அனுப்பிய அவனுடைய பிரதிநிதி அவள்! அவள் கடவுளை விடவும் மேலானவள்!!

மென்மேலும் வளர மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுவாதி

Anonymous said...

இஸ்ரேல் பழமொழி: கடவுள் எப்போதும் நம்ம கூட இருக்க முடியாது என்பதால், அம்மா என்ற உறவை எங்களுக்கு கொடுத்தார்.

Anonymous said...

சுவாதி அக்கா சொன்னதையே நானும் சொல்கிறேன்...!!! வாழ்த்துக்கள்...!!!

M.Rishan Shareef said...

நன்றிகள் சுவாதி... :)
தாய்க்குள்ள சிறப்பு வேறெவர்க்கும் இல்லை.

M.Rishan Shareef said...

கருத்துக்கு நன்றிகள் தமிழினி... :)

M.Rishan Shareef said...

நன்றிகள் தேகி.

Anonymous said...

தாயின் பெருமைக்கு நிகர்ஏது நல்ல கவிதை வாழ்த்துக்கள்

எத்தனை உறவுகள் வந்தாலும் தாயின் அன்புக்கு நிகர் உண்டோ.

M.Rishan Shareef said...

உண்மைதான்.தாயன்புக்கு நிகரான அன்பு உலகிலேது?
நன்றிகள் ராகினி...!

Anonymous said...

மிக அருமையான கவிதை ,தாயின் இடத்திற்கு வேறு ஒருவரும் வர
முடியாது
அன்புடன் விசாலம்

M.Rishan Shareef said...

ஆமாம் விசாலம் அம்மா.
உலகில் ஒரு பௌர்ணமி தான் இருக்கமுடியும்.அது போலவே
உறவுகளில் தாய்.
தான் தேய்ந்தாலும் அனைவருக்கும் ஒளியூட்டுவாள்.

மிகவும் நன்றிகள் விசாலம் அம்மா.

MSK / Saravana said...

//என் தாயின் புன்னகையை
ஒரு சில வரிகளில்.....?//

எல்லாவற்றையும் எழுதிட முடியாது..

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

mohamedali jinnah said...

ஆஹா என்ன சொல்வது என்ன எழுதுவது எனக்கு மனம் மகிழ்கின்றது தமிழில் டைப் செய்ய தெறியவில்லை என் செயவது . உங்களூக்கு கவிதை மாலை சூட்ட . I have lost my beloved mother, Allah has taken her to the paradise, in my very young age .So I like அம்மா